புதிய ஆல்ஃபா யூத் தொடர்

இளைஞர்கள் நம்பிக்கை, வாழ்க்கை மற்றும் நோக்கத்தை ஆராய்வதற்கான ஒரு புதிய வழி. 

இந்தப் புதிய தொடர் இளைஞர்கள் வாழ்க்கையின் மிகப் பெரிய கேள்விகளை ஆராய புதியதொரு வழியைக் கொடுக்கிறது. இந்த தலைமுறையினருக்காக உருவாக்கப்பட்டு, இந்தப் புதிய தொடர் இளம் வயதினர் கொண்டுள்ள உண்மையான கேள்விகளை ஆக்கப்பூர்வமாகத் ஆராய்கிறது. இந்தத் தொடர் 8 வாரங்களுக்கு, 10 அத்தியாயங்களைக் கொண்டு செயல்பட்டு , கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படைக் கருத்துக்களை அறிமுகப்படுத்தி ஆராய்ச்சிசெய்ய, ஒரு பொருத்தமான மற்றும் ஈடுபடுத்தக்கூடிய முறையை கொண்டுள்ளது.

புதிய தொடர் 2024 ஆம் ஆண்டில் வருகிறது.

முதலில் தெரிந்துகொள்ள பதிவு செய்க

இதில் என்ன புதியது?

8 வாரங்கள் இயங்கும் 10 அத்தியாயங்கள்


புதிய குறுகிய 20 நிமிடங்களுக்கும் குறைவான அத்தியாயங்கள்


இளைஞர்களால் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்டது


8 புதிய ஜென் Z சர்வதேச தொகுப்பாளர்கள்


புதிய நிபுணர்கள், கதைகள் மற்றும் நேர்காணல்கள்


புதிய அனிமேஷன் மற்றும் காட்சி முறை


55 மொழிகளில் மொழிபெயர்ப்பு

What's new?

தொகுப்பாளர்களை சந்தியுங்கள்

ஜீனியா ஜேம்ஸ்
UKவை சார்ந்த ஜீனியா “The Way UK” என்ற இணையதள சேனலின் நிகழ்ச்சிகளை உருவாக்குபவர். இவர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வரலாற்றைப் படித்தவர். அவர் தனது விசுவாசத்தின் மீது பேரார்வம் கொண்டவர், மேலும் தேவனின் அன்பை பற்றி தன்னைச் சுற்றியுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை எப்போதும் பயன்படுத்துகிறார். தாழ்மையுடன் கூடிய தன்னம்பிக்கை கொண்டவர், இளைஞர்கள் ஜீனியாவை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள் ஏனென்றால் அவர் இயல்பாகவே ஒரு தலைவர். அவர் கரீபியன் கலாச்சாரத்தில் பேரார்வம் கொண்டவர்.
ரோக்கோ பவுண்ட்
சுறுசுறுப்பும் சந்தோஷமும் நிறைந்தவர், ரோக்கோ பிரிட்டிஷ் கொலம்பியாவில் வளர்ந்தார், பகலில் வெளியில் இருப்பதையும் இரவில் இணையதள விளையாட்டுகளையும் விரும்புகிறவர். ரோக்கோ ஊக்கமுள்ளவர், முதலடியை எடுப்பவர் மற்றும் கொடுக்கும் மனமுள்ளவர் – குழுவாக இயங்குவதில் தெளிவானவர், அங்கே மற்றவர்களுக்கு முதலில் அவர் சேவை செய்கிறார். ரோக்கோ வில்லேஜ் தேவாலயத்தில் இளைஞர் ஒருங்கிணைப்பாளராக உள்ளார், மேலும் பசிபிக் லைஃப் பைபிள் கல்லூரியில் இளைஞர் ஊழியம் மற்றும் வேத பாடங்கள் குறித்து பட்டப்படிப்பு படிக்கிறார்.
மைக்கா வாக்கர்
மைக்கா வாக்கர் ஒரு கலைஞர் மற்றும் கதை சொல்பவர். திரைப்படம் மற்றும் புகைப்படம் மூலம் சிறப்பு தருணங்களை படம்பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர். இவர் முன்னதாக யூத் அலைவ் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா இயக்குனரின் உதவியாளராகவும் நிகழ்ச்சிகளை திட்டமிடுபவராகவும் பணியாற்றினார். மைக்கா ஒரு புலமை பெற்ற ஊடக படைப்பாளி, நெறிமுறை சார்ந்த நகை தயாரிப்பாளர் மற்றும் தனது காபியை விரும்பி அருந்துபவர்!
ஜானி பிரவுன்
ஜானி பிரவுன் எல்லோருக்கும் நண்பர், எப்போதும் ஒரு கனிவான வார்த்தையோடு ஆயத்தமாயிருப்பார். இந்த விளையாட்டு ரசிகர் ஓக்லஹோமாவின் மிட்வெஸ்ட் சிட்டியில் உள்ள லைஃப் சர்ச்கில் ஒரு வாலிப போதகர். ஜானிக்கு இளைஞர்களை ஆதரிப்பதில் உண்மையான ஆர்வம், எப்படி அவருக்கு ஆதரவு தேவைப்பட்டபோது அவருக்கு கொடுக்கப்பட்டதோ அதுபோலவே செய்ய விரும்புபவர். லெப்ரான் ஜேம்ஸ் போன்ற விளையாட்டு வீரர்களைப் பார்த்து ஜானி வளர்ந்தார். அவர் துல்சாவில் உள்ள புக்கர் டி. வாஷிங்டன் உயர்நிலைப் பள்ளி அணியில் டிஃபென்சிவ் லைன்மேனாக விளையாடினார்.
மரியா கில்ராய்
ஆஸ்திரேலியாவின் மரியா பயணம் செய்வதில் ஆர்வம் கொண்ட ஒரு நிதானமான ஆராய்ச்சியாளர். அவளுடைய மூத்த சகோதரர் ஒரு கத்தோலிக்க இளைஞர் குழுவில் சேர்ந்த பிறகு, ஆர்வம் அவரையும் விசுவாசத்தை ஆராய வழிவகுத்தது. இந்தப் பயணம் அவளுக்கு இயேசுவுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ள உதவியது. ஈவண்ட் மேனேஜ்மெண்ட் படித்த பிறகு, மரியா கலைக்கான தனது ஆர்வத்தை பின்தொடர்ந்தார். அவர் ஒரு திறமையான கலைஞர், மற்றும் சிட்னியில் உள்ள எக்செல்சியா கல்லூரியில் கல்வி நிர்வாகியாக பணிபுரிகிறார்.
டேனியல் ரேமுல்டா
டேனியல் பிரிஸ்பேனில் வசிக்கிறார், அவர் ஒரு ஃப்ரீலான்ஸ் நடிகர், ஒரு இசை திரையரங்கின் மேஜர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர். அவர் கிரிஃபித் பல்கலைக்கழகத்தின் குயின்ஸ்லாந்து கன்சர்வேடோரியத்தில் இசை அரங்கில் பட்டம் பெற்றார், மேலும் அவர் ஆஸ்திரேலியாவில் சேனல் 9 இல் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். டேனியல் தேவாலயத்தில் பாடுவதற்கான ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார், அங்கு அவர் வழிபாட்டுத் தலைவராகப் பணியாற்றுகிறார்.
ஐசக் ஸ்மித்
ஐசக் ஆஸ்திரேலியாவில் ஒரு போதகரின் மகனாக வளர்ந்தார், தனது சொந்த அடையாளத்தை கண்டறியும் ஒரு தேவையுடன். 15 வயதில், அவர் ஒரு மிஷன் பயணத்தின் போது, சீனாவில் ஒரு அனாதை இல்லத்தை சந்தித்தார். தேவனின் கண்மணியாக இருப்பதைப்பற்றிய அங்குள்ளவர்களின் தினசரி பாடல், தேவனுடைய பிள்ளையாக இருப்பதே அவரது அடையாளம் என்பதை அவருக்கு நினைவூட்டியது. இன்று, ஐசக் ஆல்ஃபா யூத் ஆஸ்திரேலியா அணியில் பணியாற்றுகிறார். அவர் விளையாட்டை நேசிக்கிறவர் மற்றும் இளைஞர்களின் நித்தியத்தைப் பற்றி அக்கறை காட்டுகிறார்.
ஜெஸ்ஸி ஃபெல்லிங்ஹாம்
ஜெஸ்ஸி லண்டனில் வசிக்கிறார், அவர் அமைதியாக இருப்பார் ஆனால் தான் இருக்கும் எந்த அறையிலும் அவர் இருப்பதை மற்றவர் உணரச்செய்வார். அவர் எந்த வயதினரிடமும் பேசுவதில் இயல்பானவர் மற்றும் சுவிசேஷப்பணியை விரும்புபவர் – அவர் பொது மக்களை சந்தித்து அவர்களிடம் வாழ்க்கை, நம்பிக்கை மற்றும் கடவுள் தொடர்பான கேள்விகளை கேட்பதை “The Way UK” நிகழ்ச்சியில் நீங்கள் காண்பீர்கள். தன்னைச் சுற்றியுள்ள இளைஞர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதே ஜெஸ்ஸியின் நோக்கம்.

படைப்பாளிகளைச் சந்தியுங்கள்

ஆல்பா இன்டர்நேஷனல் புதிய தொடரை உருவாக்குவதற்கு சிக்னல் ஃப்ளேருடன் இணையும் வாய்ப்பை பெற்றுள்ளது. சிக்னல் ஃப்ளேர் ஒரு விருது பெற்ற தயாரிப்பு நிறுவனமாகும், இது HBO, நெட்பிளிக்ஸ் மற்றும் பலவற்றிற்கான நிகழ்ச்சிகளை உருவாக்குகிறது. புதுமையான, தாக்கமும் அர்த்தமும் கூடிய கதை அமைப்பின் மூலம் இருளான  இடங்களுக்கு வெளிச்சத்தைக் கொண்டு வருவதே அவர்களின் நோக்கம்.

Steve Chao

ஸ்டீவ் சாவ்

இயக்குநர்


Dan Blythe

டான் பிளைத்

முதன்மை தயாரிப்பாளர்


sean jesudasan

ஷான் ஜேசுதாசன்

தொடர் தயாரிப்பாளர்


ayotunde afolabi

அயோடுண்டே அஃபோலாபி

தொடர் தயாரிப்பாளர்


அ.கே.கே

புதிய ஆல்ஃபா யூத் தொடர் எப்போது கிடைக்கும்?

புதிய தொடர் 2024 ஆம் ஆண்டு Q4 இல் ஆங்கிலம் மற்றும் சில மொழிகளில் வெளிவருகிறது. 2025 ஆம் ஆண்டு முதல் கலாச்சாரங்கள் சார்ந்த மற்றும் கூடுதல் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்புகள் கிடைக்கும்.

புதிய ஆல்ஃபா யூத் தொடர் எந்த மொழிகளில் கிடைக்கும்?

புதிய ஆல்ஃபா யூத் தொடர் ஆங்கிலம் மற்றும் 55 மொழிகளில் கிடைக்கும். இந்த ஆங்கிலத் தயாரிப்பு பல்வேறு கலாச்சாரங்கள் சார்ந்த பதிப்புகளாகவும் கிடைக்கும்.

Skip to content